மட்டக்களப்பில் முதன் முறையாக T 20 போட்டிக்கு ஏலம் மூலம் வீரர்கள் தெரிவு !

மட்டக்களப்பு வரலாற்றில் முதன்முறையாக T 20 கிரிக்கெட் தொடருக்கு ஏலம் மூலம் வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கட் அபிவிருத்தி சபையினால் எதிர்வரும் சனிக்கிழமை குறித்தT20 கிரிக்கெட் தொடரானது ஆரம்பமாகவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பகுதிகளில் உள்ள விளையாட்டு வீரர் தனது திறமையினை வெளிப்படுத்துவதற்கான களத்தினை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் இந்த சுற்றுப்போட்டி நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு, மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கட் அபிவிருத்தி சபையின் தலைபர் லோபஸ் தலைமையில் கல்லடியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் கிறிக்கட் சுற்றுப்போட்டியின் தலைவர் அருள்பிரகாசம், மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கட் அபிவிருத்தி சபையின் பணிப்பாளர்களில் ஒருவரான கு.சஹான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

அந்தவகையில் குறித்த சுற்றுப்போட்டியானது சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகி 28ஆம் திகதி இறுதிப்போட்டி நடைபெறவுள்ளதுடன் இந்த சுற்றுப்போட்டியில் ஐந்து அணிகள் விளையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ஏலம் மூலம் தெரிவுசெய்யப்பட்ட சுமார் 150பேர் இந்த ரி20 சுற்றுப்போட்டியில் பங்குபற்றவுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.Published from Blogger Prime Android App