சுவாமி விபுலானந்தரின் 132வது ஜனன தினம்

உலகின் முதல் தமிழ் பேராசிரியர் என்ற பெருமையினைக்கொண்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 132வது ஜனன தினம் மட்டக்களப்பு கல்லடியில் உள்ள விபுலானந்தரின் சமாதியில் இன்று(03) அனுஸ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு இராம கிருஸ்ணமிசனின் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீல மாதவானந்தா ஜி மஹராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா சபையின் தலைவர் கே.பாஸ்கரன் மற்றும் சிவானந்தா தேசிய பாடசாலையின் அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,விவேகானந்தா மகளிர் கல்லூரியின் ஆசிரியர்கள்,மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது சமாதியில் சுவாமிக்கு விசேட பூஜைகள் நடத்தப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வின்போது விசேடமாக சுவாமி விபுலானந்தரின்” வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ …”பாடல் பாடப்பட்டு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.Published from Blogger Prime Android App