மட்டக்களப்பு உப்பாற்றிலிருந்து மனித எச்சங்கள் மீட்பு !

மட்டக்களப்பு சத்திருக்கொண்டான் கண்ணகி அம்மன் ஆலயத்தின் பின்பகுதியிலுள்ள உப்பாற்றிலிருந்து மண்டை ஓடு மற்றும் மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த ஆற்றில், மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவரின் வலையில் மண்டை ஓடு மற்றும் இரண்டு மனித எலும்புக்கள் சிக்கியுள்ளன.
 
இதனை தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் வங்கப்பட்ட நிலையில், தடவியல் பிரிவினர் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றன.

குறித்த விசாரணையில், மீட்கப்பட்ட மண்டையோடு 40 வயதிற்குட்பட்ட ஆண் ஒருவரின் மண்டை ஒடு என பகுப்பாய்வாளர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவானும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவானுமாகிய தர்சினி, சம்பவ இடத்துக்கு சென்று மண்டை ஓட்டை பார்வையிட்டதுடன், மனித எச்சங்களை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மீட்கப்பட்ட மனித எச்சங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மீட்கப்பட்ட மண்டை ஒடு கடந்த பெப்பிரவரி மாதம் 17 ஆம் திகதி காணாமல்போயுள்ள மனநலம் குன்றிய 28 வயதுடைய இளைஞனின் எச்சங்களாக இருக்கும் என உறவினர்களினால் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.Published from Blogger Prime Android App