மட்டக்களப்பு நகர் பகுதியின் ஹர்த்தால் !

* பாடசாலைகள் திறக்கப்பட்டு ஆசிரியர்கள் கடமைக்கு சமூகமளித்திருந்ததுடன் மாணவர்களின் வருகை சுமார் 75 வீதமாக காணப்பட்டது.

* மட்டக்களப்பு அரச பேரூந்து நிலையம் மற்றும் தனியார் பேரூந்து நிலையங்களில் இருந்து பேரூந்து சேவைகள் சீராக முன்னெடுக்கப்பட்டமை அவதானிக்க முடிந்தது.

* காலை 7.15 மணியிலிருந்து 9.30 மணிவரை மக்கள் நடமாட்டம் வழமை போன்று இடம்பெற்ற போதிலும் அதன் பின்னர் சன நடமாற்றம் குறைவாகவே காணப்படுகின்றது.

* மட்டக்களப்பு பொதுச் சந்தை மூடப்பட்டிருந்த நிலையில் வியாபார நடவடிக்கைகள் முற்றுமுழுவதுமாக முன்னெடுக்கப்படவில்லை.

* ஏனைய வர்த்தக நிலையங்களான நகை, உணவகங்கள் மற்றும் ஆடை விற்பனை நிலையங்கள் வழமையாக 10 மணியின் பிற்பாடு திறக்கப்படுவது வழமையாக இருந்த போதிலும் இன்று காலை 11.15 மணியாகியும் திறக்கப்படவில்லை.

* தனியார் வங்கிகள் மற்றும் அரச வங்கிகளின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் வாடிக்கையாளர்கள் வருகை மிக மிக குறைவாக காணப்படுகின்றது.

* மாவட்ட செயலகம் உள்ளிட்ட அரச திணைக்களங்கள் திறக்கப்பட்டு சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் சேவை நாடிகளின் வருகை குறைவாகவே காணப்படுகின்றது.

Published from Blogger Prime Android App