கோட்டாவின் தீர்மானங்களையே ரணில் முன்னெடுக்கிறார் : இதனையே நீதிமன்றம் தவறு என்கிறது : பந்துல குணவர்தன !

பொருளாதார ரீதியில் கோட்டாபய ராஜபக்ஷ முன்னெடுத்த தீர்மானங்களையே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்துச் செல்லும் நிலையில், இந்த தீர்மானங்களை உயர்நீதிமன்றம் தவறென்று குறிப்பிடுகிறது என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பொருளாதார பாதிப்புக்கு நாங்கள் மன்னிப்பு கோர வேண்டுமாயின் ஆட்சியில் இருந்த அனைவரும் களனி விகாரைக்கு சென்று மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.Published from Blogger Prime Android App