மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகபட்சமாக 34.3 மில்லி மீற்றர் மழை விழ்ச்சி உறுகாமத்தில் பதிவு !!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (12) அதிகாலையுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை வீழ்ச்சியாக 34.3 மில்லி மீற்றர் மழை உறுகாமம் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

இதேவேளை மழைவீழ்ச்சியை அளவிடும் பிரதேசங்களான வாகனேரியில் 11.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உன்னிச்சையில் 8.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பாசிக்குடாவில் 11 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், நவகிரியில் 4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் இதுதவிர குறைந்த மழைவீழ்ச்சியாக மட்டக்களப்பில் 2.6 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி ரமேஸ் சுப்பிரமணியம் மாவட்ட ஊடகப்பிரிவிற்கு தகவல் தெரிவித்தார்.
Published from Blogger Prime Android App