மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாக பிரிவுகளான கோரளைப்பற்று தெற்கு கிரானில் உள்ள ஐந்து கிராமங்களில் 941 குடும்பங்களும், போரதீவுப்பற்று வெல்லவெளியில் உள்ள நான்கு கிராமங்களில் 92 குடும்பங்களும், கோரளைப்பற்று வடக்கு வாகரையில் உள்ள இரண்டு கிராமங்களில் 319 குடும்பங்களும், எறாவூர்ப்பற்று செங்கலடியில் உள்ள எழு கிராமங்களில் 32 குடும்பங்களும், மண்முனை தென் மேற்கு பட்டிப்பளையிலுள்ள நான்கு கிராமங்களில் 47 குடும்பங்களும், மண்முனைப்பற்று ஆரையம்பதி மற்றும் கத்தான்குடியில் தலா ஒரு குடும்பம் வீதம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.