பிரபாகரன் நேர்மையான ஒரு தலைவர் என அவர் மேலும் தெரிவித்தார்.
துவாரகா என்ற பெயரில் மாவீரர் நாளன்று வெளியான காணொலி தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நிகராக தமிழர்கள் தரப்பில் இனி எவருமே வர முடியாது. அவரின் மகள் துவாரகா பேசுகின்றார் என்று கடந்த நவம்பர் 27ஆம் திகதி வெளியான காணொலி போலியானது. இந்த காணொலி புலம்பெயர் தமிழர்களின் ஒரு குழுவால் திட்டமிட்டு தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த காணொலிக்கும் இலங்கைப் புலனாய்வு பிரிவுக்கும் இடையில் எந்தவித தொடர்பும் இல்லை.
அந்த போலி காணொலிக்கும் வெளிநாட்டு அரசுகளுக்கும் இடையில் தொடர்பு இருக்கும் என்று என்னால் கூற முடியாது. அதேவேளை, தொடர்பு இல்லை என்றும் என்னால் கூற முடியாது. ஆனால், இதன் பின்னணியில் புலம்பெயர் தமிழர்களின் ஒரு குழு திட்டமிட்டுச் செயல்பட்டுள்ளது என்பது நூறு வீதம் உண்மை.
2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப் போரில் பிரபாகரனும் அவரின் குடும்பத்தினரும் உயிரிழந்து விட்டனர். அவர்களை வைத்து இனி எவரும் அரசியல் செய்ய முடியாது. அது அவர்களை அவமானப்படுத்தும் செயல்.
பிரபாகரனின் கொள்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், அவர் நேர்மையான ஒரு தலைவர். இறுதி வரை போராடிய ஒரு தலைவர் என கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.