கொழும்பு ஆமர் வீதி தீ பரவல்: வர்த்தக நிலையத்தின் அனைத்துப் பொருட்கள் நாசம்!

கொழும்பு ஆமர் வீதியின் கிரீன் லேனில் வர்த்தக நிலையம் ஒன்றில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை (26) காலை 8.30 மணியளவில் ஏற்பட்ட தீயினால் அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளன.

தீயணைப்பு பிரிவினர் நான்கு தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை அணைத்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆர்மர் வீதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.Published from Blogger Prime Android App