குறித்த வேலைத்திட்டத்தினை முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் ஆரம்பித்துவைத்துள்ளார்.
மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தின் கள உத்தியோகத்தர்களான சந்திரகுமார், நவரத்தினம் திருநாவுக்கரசு, கிராமிய குழு தலைவர் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், தொழில்நுட்ப உத்தியோகத்தர் பரிதிகுமாரன், பிரதேச மகளீர் அணிச் செயலாளர் கவிதா, பிரதேசக்குழுத் தலைவர் ராஜேந்திரன், செயலாளர் சிவா ஸ்ரீ காந்தன் உட்பட முக்கியஸ்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
