யுக்திய நடவடிக்கையில் மேலும் 836 பேர் கைது !

நாடளாவிய ரீதியில் இன்று திங்கட்கிழமை ( 29 ) அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் யுக்திய விசேட நடவடிக்கையின் போது 836 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட 6 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவர் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் விசேட பொலிஸ் பிரிவில் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் பெயர் பட்டியலில் இருந்த 18 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட 257 சந்தேக நபர்களில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் கைது செய்யப்பட்ட 28 பேருக்கும் ஏனைய குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 219 பேருக்கும் திறந்த பிடியாணைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையின்போது, 142 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் 95 கிராம் ஐஸ் போதைப்பொருளும் 1,650 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.Published from Blogger Prime Android App