ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உள்விவகாரங்கள் குறித்து ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்கள் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் தெரிவித்தபோதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டதாக ஆங்கில இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் அவர், "அரசியல் தீர்மானங்கள் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மூலமே பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்; குடும்ப உறுப்பினர்கள் மூலம் அல்ல. எனது உறவினரின் கருத்துக்களுக்கு நாங்கள் பொறுப்பு கூறமுடியாது. அவர்களை நேர்காணல் செய்வது நியாயமற்றது" என தெரிவித்துள்ளார்.
மேலும், "தேவையற்ற கருத்துகளால் பொதுமக்களை தவறாக வழிநடத்த வேண்டாம். நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களில் பொதுமக்கள் மீது சுமத்தப்படும் அதிக வரிகளுக்கு எனது கட்சி எதிரானது. மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் எனது கட்சி தொடர்ந்து பணியாற்றும்" என்றும் மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
