காக்காச்சிவட்டை பாலம் ஆபத்தான நிலைமையில்!




போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட காக்காச்சிவட்டை பாலமானது கடந்த வருடம் புதிதாக நிர்மாணம் செய்யப்பட்டு பொதுமக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டது.அண்மையில் ஏற்பட்ட அதிக மழை வெள்ளப் பெருக்கினால் இப்பாலத்தின் முன்பகுதியானது பாரியளவில் சேதமடைந்துள்ளதுடன் பொதுமக்கள் வாகங்களில் பயணிப்பது ஆபத்தான நிலைமையில் உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மிகவிரைவில் இதற்கான தீர்வினைப் பெற்றுத்தருமாறு இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.