உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை இன்று செவ்வாய்க்கிழமை (23) இரண்டாம் வாசிப்புக்கு எடுத்துக் கொள்வதா இல்லயைா என்பது தொடர்பான வாக்கெடுப்பு 33 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு ஆதரவாக 83 வாக்குகளும், எதிராக 50 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதன்படி, 33 மேலதிக வாக்குகளால் சட்டமூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து விவாதம் ஆரம்பமானது.