பட்டிருப்பு
வலயக் கல்வி
அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றுகின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் சி.சிறிதரன் அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ஒன்றுகூடலானது பட்டிருப்பு தேசிய பாடசாலையில் இன்று(07) காலை 09.30 மணிக்கு ஆரம்பமானது. இவ் ஒன்றுகூடலானது பட்டதாரி ஒன்றியத்தின் வேண்டுகோளுக்கமைய ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் அகில இலங்கை பட்டதாரிகள் சங்கத்தால் சேவையை பாராட்டி டொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. கல்வி முகாமைத்துவ உதவிக் கல்விப் பணிப்பாளர் என். நேசகஜேந்திரன் மற்றும் மாணவர்கல்வி அபிவிருத்திக்கான பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ் ஜீவானந்தம் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.






