சுகாதாரத்துறை தொழிற்சங்கள் வேலை நிறுத்தப் போராட்டம் !

நாடளாவிய ரீதியில் 72 சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.

அதன்படி, குறித்த வேலை நிறுத்த போராட்டம் இன்று வியாழக்கிழமை (01) காலை 6.30 மணி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சுகாதார தொழிற் சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் அகில இலங்கை தாதியர் சங்கமும் தீர்மானித்துள்ளன.

வேலைநிறுத்தத்தில் ஈடுபடுமாறு அரசாங்கத்துடன் தொடர்புடைய தொழிற்சங்கங்களினால் கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளதால் போராட்ட நடவடிக்கையை கைவிட தீர்மானித்ததாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் ரவீந்திர கஹந்தவாராச்சி தெரிவித்தார்.Published from Blogger Prime Android App