உலககெங்கிலும் உள்ள செவ்வாடைப் பக்தர்கள் ஒரே நேரத்தில் இவ் வழிபாட்டில் ஈடுபடுமுகமாக நிகழ்நிலை மூலமாக நிகழ்வுகள் இடம்பெற்றன. சக்தி முனைவர் ப.ஸ்ரீதேவிரமேஷ் விளக்கேற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.
மேற்படி கோடி அர்ச்சனை நிகழ்வு களுவாஞ்சிகுடி சக்தி இல்ல பராசக்தி மன்றத்தினராலும் மிகவும் பக்திபூர்வமாக கொண்டாடப்பட்டது. இவ் பக்தி நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக களுவாஞ்சிகுடி சிறுவர் நன்னடத்தை நிலைய பொறுப்பதிகாரி எம்.என்.எம்.றபாஸ் கலந்து கொண்டார்.
