கிளிநொச்சியில் பதற்றம்! காட்டுமிராண்டித்தனமாக செயற்பட்ட காவல்துறையினர்: மாணவர்கள் கைது சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் மீது தாக்குதல்


தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களுடைய விடுதலை தொடர்பில் கிளிநொச்சி காவல் நிலையத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், மாணவர்களுடைய மருத்துவ அறிக்கை கிடைக்கப் பெற்றதும் விடுதலை செய்யப்படுவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் பதற்றம்! காட்டுமிராண்டித்தனமாக செயற்பட்ட காவல்துறையினர்: மாணவர்கள் கைது | Independence Day Black Day Protest

கிளிநொச்சியில் பதற்றம்! காட்டுமிராண்டித்தனமாக செயற்பட்ட காவல்துறையினர்: மாணவர்கள் கைது | Independence Day Black Day Protest

இரண்டாம் இணைப்பு
சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தற்போது குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்ட பேரணியின் மீது நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தநிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகியதோடு 5 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்

இந்த போராட்டத்தின் போது, கவிதரன், மிதுசன், எலிஸ்ராஜ், அபிசேக் மற்றும் நிவாசன் ஆகியோரே இவ்வாறு கைது செய்பட்டுள்ளனர்  


அத்தோடு குறித்த பகுதியில் நிலவிய பதற்ற சூழலினால் A9 மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது  

தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த நீர்த்தாரை பிரயோகத்தை மீறி, ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  



கிளிநொச்சியில் பதற்றம்! காட்டுமிராண்டித்தனமாக செயற்பட்ட காவல்துறையினர்: மாணவர்கள் கைது | Independence Day Black Day Protest

கிளிநொச்சியில் பதற்றம்! காட்டுமிராண்டித்தனமாக செயற்பட்ட காவல்துறையினர்: மாணவர்கள் கைது | Independence Day Black Day Protest

கிளிநொச்சியில் பதற்றம்! காட்டுமிராண்டித்தனமாக செயற்பட்ட காவல்துறையினர்: மாணவர்கள் கைது | Independence Day Black Day Protest

கிளிநொச்சியில் பதற்றம்! காட்டுமிராண்டித்தனமாக செயற்பட்ட காவல்துறையினர்: மாணவர்கள் கைது | Independence Day Black Day Protest

முதலாம் இணைப்பு  
இலங்கையின் சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட கரிநாள் பேரணியை தடுக்கும் முகமாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

நீர்த்தாரை பிரயோகம்
அதனை கட்டுப்படுத்த பெருமளவான காவல்துறையினர் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதுடன், நீர்த்தாரை வாகனமும் வரவழைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் பதற்றம்! காட்டுமிராண்டித்தனமாக செயற்பட்ட காவல்துறையினர்: மாணவர்கள் கைது | Independence Day Black Day Protest

இந்தநிலையில், போராட்டத்தை அடக்க காவல்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதுடன், நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுPublished from Blogger Prime Android App வருகின்றனர்.
 
கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட சுதந்திரதின கரிநாள் போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்தோடு, கிளிநொச்சி ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்க கோரி சார்லஸ் நிர்மலநாதன் உள்ளிட்ட தரப்பினர் கிளிநொச்சி பொலிஸ்நிலையத்திற்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட மாணவர்களை சட்டவைத்திய அதிகாரியின் முன் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்வதற்கான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும், கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யும் வரை போராட்டம் தொடரும் என ஆர்பாட்டக்காரர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.