கொழும்பில் முக்கிய வீதிகளுக்குப் பூட்டு: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

கொழும்பின் சில வீதிகள் இன்று முதல் மூடப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனிதெரு பகுதிகளில் உள்ள சில வீதிகள் இன்று (05.2.2024) முதல் 03 கட்டங்களாக மூடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

போக்குவரத்து தடை தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பாடசாலை கற்றல் நடவடிக்கை தொடர்பில் அமைச்சு அறிவிப்பு
பாடசாலை கற்றல் நடவடிக்கை தொடர்பில் அமைச்சு அறிவிப்பு
நிலத்தடி குழாய்கள் 
உத்தரானந்த மாவத்தை, நவம் மாவத்தை முதல் தொடருந்து கடவை வரையிலான பகுதி இன்று முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் முக்கிய வீதிகளுக்குப் பூட்டு: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல் | Road Closed In Colombo Area

அத்துடன் உத்தரானந்த மாவத்தை, பெரஹெர மாவத்தை முதல் நவம் மாவத்தை வரையிலான பகுதி பெப்ரவரி 20 முதல் மார்ச் 04 வரையிலும் மூடப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.

உத்தரானந்த மாவத்தை, பெரஹெர மாவத்தை வழியாக ரொட்டுண்டாகார்டன் சந்தி வரையான பகுதி மார்ச் 05 முதல் 11 வரை மூன்றாம் கட்டமாக மூடப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.  

நிலத்தடி குழாய்கள் பதிக்கப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாலேயே குறித்த வீதிகள் முடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Published from Blogger Prime Android App