இவ்விழாவில் பிரதம அதிதியாக முதன்மை உளவளத்துணையாளரும் மகளிர், சிறுவர் விவகார அமைச்சின் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கான முதன்மைப் பயிற்றுநருமான திரு.முத்துராஜா புவிராஜா, விசேட அதிதிகளாக மண்முனை வடக்குப் பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.திருச்செல்வம் மேகராஜா, பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் வெளிக்கள உத்தியோகத்தர் திரு.சாம்பசிவம் பரணீதரன், அருட்பணி டிலாந்த அடிகளார் (மியானி) ,பன்னிச்சையடி கிராம உத்தியோகத்தர் திரு.பீ.சபேஸ், பங்குச் சபை செயலாளர் திரு. ரொக்ஸ்மன் டிலிமா மற்றும் பங்குசபை பொருளாளர் திரு. பீட் கென்றிக் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இங்கு ஆரம்ப நிகழ்வாக பிள்ளைகளினால் மாலை அணிவிக்கப்பட்டு அதிதிகள் வரவேற்கப்பட்டனர். மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம் ஆகிய சம்பிரதாய நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பிள்ளைகள் ஆடல், பாடல்கள், பேச்சு, நாடகம் போன்ற அரங்க நிகழ்ச்சிகள் மூலம் தமது ஆற்றல் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தனர். நிறைவில் அனைத்துப் பிள்ளைகளுக்கும் அதிதிகளினால் சான்றிதழ்களும், கேடயங்களும், பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டு அவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
விழாவை சிறப்பான முறையில் பெற்றோர்களின் பூரண ஒத்துழைப்புடன் ஒழுங்கமைத்து செயற்படுத்திய முன்பள்ளியின் அதிபர், ஆசிரியர்களுக்கு பலரும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.