தமிழக அரசு -தமிழ் வளர்ச்சித்துறையினால் சிறந்த ஆய்வுக்கட்டுரை நூலாக கிழக்குப் பல்கலைக்கழக கு. நித்தியாந்தனின் நூல் தெரிவு!

தமிழக அரசு - தமிழ் வளர்ச்சித்துறையினால், 2021ன் சிறந்த ஆய்வுக்கட்டுரை நூலாக, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் தினைக்களம், மிருக விஞ்ஞரனவியல் தினைக்களம் ஆகியற்றில் ஆய்வுகூட உதவியாளராகவும், தொழில்நுட்ப உத்தியோகஸ்தராகvum கடமையாற்றி, (1982 - 1990) தற்போது தமிழ் நாட்டில் மன நல ஆலோசகராக பணியாற்றும், அருட்தந்தை கு. நித்தியாந்தன் அவர்களால் எழுதப்பட்ட "நுண்ணுயிர் எதிரி - கொரோனா - ஓர் சமூக உளவியல் கண்ணோட்டம்" நூல் தெரிவு செய்யப்பட்டு, சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டது. சென்னை, கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில், தமிழக செய்தித்துறை அமைச்சர் திரு. வெள்ளக்கோவில் சுவாமிநாதன் பரிசை வழங்கினார். நூலின் பதிப்பகத்திற்கும் பரிசு வழங்கப்பட்டது.Published from Blogger Prime Android App