இன்று அதிகாலை 12.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியால நடவடிக்கையின் போதே இவர்கள் கைதாகியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 1,019 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் குற்றப் பிரிவினருக்கு அனுப்பப்பட்டுள்ள பட்டியலில் உள்ள 54 சந்தேக நபர்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனையின்போது, ஹெரோயின், ஐஸ், கஞ்சா, மாவா உள்ளிட்ட கணிசமான அளவு போதைப் பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 49 பேர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் கண்காணிப்புப் பட்டியலில் இருந்தவர்கள் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
