நாட்டில் வழமையாக 60 முதல் 80 ரூபா வரையில் இருந்த தேங்காயின் விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ருக்ஷான் ஹர்ஷன தெரிவித்துள்ளார்.
அதன்படி, தற்போது ஒரு தேங்காயின் விலை 120 ரூபாவிலிருந்து 150 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இதனை நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அதிகரித்துள்ள தேங்காய் விலையினால் சோற்று பொதி ஒன்றை தயாரிக்க முடியாமல் சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவருகின்றனர். இதனால் உணவுப் பொதிகளை அதிக விலைக்கு விற்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
அரிசி, கோழிக்கறி, முட்டை, எரிவாயு உள்ளிட்ட அனைத்தும் கணிசமாக விலை அதிகரித்துள்ள நிலையில் தேங்காய்களின் விலையும் அதிகரித்துள்ளது.
தேங்காய் விலை அதிகரிப்பின் காரணமாக எதிர்வரும் நாட்களில் தேங்காய் எண்ணெயின் விலையும் அதிகரிக்கும் என எச்சரித்துள்ளார்.