வெல்லாவெளி விவேகாநந்தம் அவர்களின் 'உமிச்சட்டி' சிறுகதைத் தொகுதி வெளியீடு

போராதனைப் பல்கலைக் கழகத்தின் 1977 – 1978 காலப்பபகுதில் கலைப்பீடத்தில் பயின்ற நண்பர்கள் அணியின் அனுசரணையில் வெல்லாவெளி விவேகாநந்தம் அவர்களின் 'உமிச்சட்டி' சிறுகதைத் தொகுதி 03.03.2024 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு களுதாவளை கலாசார மண்டபத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது. 

தேசியக் கலைஞர் கலாநிதி எஸ்.கோபாலசிங்கம் (வெல்லவூர்க் கோபால்) தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வின் முதன்மை அதிகளாக வாழ்நாள் பேராசிரியர் வ.மகேஸ்வரன், முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர், பேராதனைப் பல்கலைக் கழகம், பேராசிரியர் மா.செல்வராசா, வேந்தர் கிழக்குப் பல்கலைக்கழகம், கலாநிதி.ம.அல்பிரட், முன்னாள் வணிக முகாமைத்துவப் பீடாதிபதி, பேராதனைப் பல்கலைக் கழகம், பேராசிரியர் க.இராஜேந்திரம், புவியியல் துறை, கிழக்குப் பல்கலைக் கழகம் 

கௌரவ அதிதிகளான திருமதி. இமெல்டா சுகுமார், முன்னாள் யாழ்ப்பாண அரசாங்க அதிபரும், சமூகசேவைகள் அமைச்சின் செயலாளரும், திரு.க.கருனாகரன் முன்னாள் மட்டக்களப்பு அரசாங்க அதிபர், சட்டத்தரணி மு.கணேசராசா, முன்னாள் பிரதி ஆணையாளர் நாயகம், இறைவரித் திணைக்களம்;, , எந்திரி த.இராமச்சந்திரன், பிரபல பாலங்கள் வடிவமைப்பு பொறியிலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபை, சட்டத்தரணி கி.புண்ணியமூர்த்தி, பீடாதிபதி, கல்வியற் கல்லூரி, அட்டாளைச்சேனை, எஸ்.மனோகரன், முன்னாள் கிழக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர், திரு.வே.மயில்வாகனம், முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர், கலாநிதி எஸ்.தில்லைநாதன், மட்டக்களப்பு, கலாநிதி முருகு தயாநிதி, முதுநிலை விரிவுரையாளர், தேசிய கல்வி நிறுவகம். ஆகியோரும் கலந்து வெளியீட்டினை சிறப்பித்தனர்.

விவேகாநந்தன் என்ற படைப்பாளன் நீண்ட காலமாகத் தன்னுள் தேக்கி வைத்த நினைவுகளையும், சந்தித்த மனிதர்களையும், அவர்களிடையே ஏற்பட்ட பிரச்சினைகளையும் ஆழ்மனங்கொண்டு அவற்றைப் புனைவுகளாக்கி வெளிக்கொணர்ந்துள்ளார். உண்மையில் இது ஒரு அரிய நிகழ்வு. விவேநாந்தன் என்ற நண்பனிடம் இவ்வளவு ஆளுமையும் படைப்பு மனமும் தேங்கிக் கிடந்தனவே. இவற்றை உரிய முறையில் தனது பால்யப் பருவத்தில் வெளிப்படுத்தியிருந்தால் இன்றைய தேதியில் அவர் ஈழத்துச் சிறுகதைச் சிற்பிகளுள் ஒருவராயிருப்பார். ஆயினும் காலந் கடந்தேனும் மடை திறந்த வெள்ளம் பாய்கிறது என மகிழ்வோம் என தனது ஆதங்கத்தை வாழ்நாள் பேராசிரியர் வ.மகேஸ்வரன் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

 நூலின் முதற்பிரதியினை மட்டக்களப்பு தமிழ்சங்க தலைவர் சைவப்புரவலர் பெற்றுக்கொள்ள கலாபூசணம் அசோகாம்பிகை (மண்டூர் அசோகா) நூல் வெளியீட்டுரையினையினையும், கிழக்குப் பல்கலைக் கழக சிரேஸ்ட விரிவுரையாளர் க.மோகனதாஸ் நூலின் நயவுரையினையும் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் க.கணபதி, ஓய்வு நிலை அதிபர் ஆ.சிவநாதன், ஓய்வு நிலை பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.ஏ.எம். இஸ்மாயில் வாழ்த்துரையினையும், ஏற்புரையினை நூலாசிரியர் த.விவேகாநந்தம் ஆகியோர் நிகழ்த்தி உமிச்சட்டியின் கனதியை வெளிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.Published from Blogger Prime Android App