தாந்தாமலை பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்திய மரணம்!




கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மக்களடியூற்று தாந்தாமலை பிரதேசத்தை சேர்ந்த குடும்பப்பெண் ஒருவர் கடந்த (08) மாதமாக கருவுற்றிருந்த நிலையில் வீட்டின் அருகில் உள்ள பொதுக்கிணற்றில் இருந்து நேற்று சடலமாக மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டார். நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்டவைத்தியரினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது ஆரோக்கியமான நிலையில் தாயின் வயிற்றினுள் இருந்து இறந்த நிலையில்  ஆண் குழந்தை வெளியில் எடுக்கப்பட்டது.பின்னர் இருவரின் உடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.