நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தால் இரகசிய வாக்குமூலம் வழங்குவேன். திறந்த மன்றில் பகிரங்க வாக்குமூலம் வழங்கினால் எனக்கும்,எனது குடும்பத்தாரின் உயிருக்கும் ஆபத்து நேரிடும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பொலன்னறுவையில் சனிக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகச்சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
குண்டுத் தாக்குதலை யார் நடத்தியது என்பது தொடர்பான தகவல்கள் எனக்கு மூன்று வாரங்களுக்கு முன்னதாகவே கிடைக்கப்பெற்றது.
அதன் பின்னரே நேற்று முன்தினம் கண்டியில் வைத்து நான் அவ்வாறு குறிப்பிட்டேன்.உண்மையை வெளிப்படுத்துமாறு நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தால் நீதிமன்றத்துக்கு இரகசிய வாக்குமூலம் வழங்குவேன்.
திறந்த மன்றில் பகிரங்கமாக வாக்குமூலம் வழங்க முடியாது,ஏனெனில் அவ்வாறு வழங்கினால் எனக்கும்,எனது குடும்பத்தாருக்கும் உயிராபத்து ஏற்படும்.
ஆகவே நீதிமன்றத்துக்கு வாக்குமூலம் வழங்க தயாராக உள்ளேன்.அரசியல் எதிர்பார்ப்புக்களை அடிப்படையாக்க கொண்டு நான் இவ்வாறு குறிப்பிடவில்லை.உண்மையை வெளிப்படுத்தவே எதிர்பார்க்கிறேன் என்றார்.