வாகன மொன்றில் குறித்த போதை மாத்திரைகள் எடுத்து வரப்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
காத்தான்குடி டெலிகொம் வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) காலை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
கைதான நபரிடமிருந்து 735 மதன மோதக பக்கற்றுகள் மீட்கப்பட்டுள்ளதுடன் வாகனமும் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை கடந்த இரு நாட்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஐஸ் மற்றும் ஹெரோயின், கேரளா கஞ்சாவுடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.