மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஊடாக வழங்கப்படும் சேவைகள் இன்று முதல் டிஜிட்டல் முறையில் !

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஊடாக வழங்கப்படும் சேவைகள் இன்று முதல் டிஜிட்டல் முறையில் முன்னெடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, சேவை பெறுநர்கள் தொலைபேசி இலக்கங்களில், முதல் மூன்று இலக்கங்களாக தங்களுடைய மாவட்ட தொலைபேசி குறியீட்டு இலக்கத்தை முதலாவதாக அழுத்தி, பின்னர் 2 117 116 என்ற தொலைபேசி இலக்கத்தையும் சேர்த்து அழைப்பினை ஏற்படுத்துவதன் ஊடாக தங்களுக்கான திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிகொள்ள முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.Published from Blogger Prime Android App