கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல் !

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் சற்று முன்னர் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

கிராண்ட்பாஸ் வேல்ஸ் குமார மாவத்தையில் உள்ள டயர் கடையொன்றிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஐந்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆமர் வீதியூடாக நீர்கொழும்பு நோக்கிய பாதை ஒரு வழிப் பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
Published from Blogger Prime Android App