வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மாவட்ட நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் தங்களை விடுதலைசெய்யுமாறு கோரி 8 பேரில் ஐவர் இன்று காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்கள் நேற்று காலை நீதிமன்றிற்கு அழைத்து செல்லும் போதும் உணவு உட்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றையதினமும் அவர்கள் உணவினை உட்கொள்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர் என்றும் தங்களை விடுவிக்கும்வரை இந்தப் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.