மட்டக்களப்பில் வீடு ஒன்றில் குப்பைக்குள் இருந்து குண்டு வெடித்ததில் ஒருவர் படுகாயம் !

மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் உள்ள வீடு ஒன்றில் குப்பைக்குள் இருந்து குண்டு வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் வியாழக்கிழமை (07) இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

குறித்த பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் உள்ள வீடு ஒன்றின் உரிமையாளர் காணியை துப்பரவு செய்து அதன்குப்பைகளை தீயிட்டு எரித்துக் கொண்டிருந்தபோது அதில் இருந்த கைக்குண்டு பாரிய சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளதாக தெரியவந்துள்ளது .

மேலும் இச் சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.Published from Blogger Prime Android App