பாடசாலை மாணவர்களுக்கு ஜனநாயகம் தொடர்பான நடைமுறை அனுபவங்களை பெற வாய்ப்பளித்து சட்டத்தின் முக்கியத்துவம், இணக்கப்பாடுகள் ஏனையோரின் கருத்துக்களை செவிமடுத்தல், மதித்தல் தொடர்பாகவும் பரந்துபட்டு தேசிய குறிக்கோள்களை இலக்காகக் கொண்டும் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலய கோட்டக்கல்வி அதிகாரி திரு RJ.பிரபாகரன் அவர்களும், சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் திரு T. குருபரன் அவர்களும், கௌரவ அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலக வளவாளர் திரு.M. ரமேஷ் அவர்களும், பாடசாலையின் பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர், பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.
