நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அவரிடம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி எத்தகைய செயற்பாடுகளை முன்னெடுத்தாலும் அதுவும் எமக்கு பிரச்சினை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தற்போதைய உள்ளகப் பிரச்சினைகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள அவர், அந்த கட்சியின் உள்ளக பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ச எம்பி போட்டியிடுவதாக தெரிவிக்கப்படுகிறது என அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள அவர், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு நாமல் ராஜபக்சவுக்கு இன்னும் காலம் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
