மட்டக்களப்பு - கிரான்குளம் அருள்மிகு ஸ்ரீ கணபதிப்பிள்ளையார் ஆலய புனராவர்த்தன பஞ்சகுண்டபக்ஷ அஷ்டபந்தன மகாகும்பாவிசேகம் -2024

மெய்யடியார்களே, ஈழமணிதிருநாட்டின் கண்ணே பலவளங்களாலும் சிறப்புற்றுவிளங்கும் மட்டுமாநகரின் தெற்கேசுமார் எட்டு மைல்தொலைவில் மேற்கில்மட்டக்களப்புவாவியும் ,கிழக்கில்வங்காளக்கடலும்,தெற்கே குருக்கள்மடம்,வடக்கே புதுக்குடியிருப்புக் கிராமங்களாலும் சூழப்பெற்ற இயற்கைஎழில்கொஞ்ச ,நஞ்சரவம்தாலாட்டமாயோனும் சேவற்கொடியோனும் தெருவோரமமர்ந்து,முத்துமாரியம்மனும் காளியம்மனும்ஒருங்கேஅமர்ந்த கிரான்குளம் திவ்விய பதியினில் பன்னெடுங்காலமாக கோயில்கொண்டு எழுந்தருளி அடியார்கள் குறைதீர்க்கும் கற்பகத்தருவான கணபதிப்பிள்ளையாருக்கும் ஏனையபரிவார தெய்வங்களுக்கும் நிகழும் குரோதிவருடம் ,சித்திரைதிங்கள் எட்டாம் நாள்(21/04/2024) ஞாயிற்றுக்கிழமை திரயோதசித் திதியும் உத்தர நட்சத்திரமும் அமிர்தசித்த யோகமும் மிதுனலக்கினமும் கூடிய காலை 9.35 மணிதொடக்கம் 11.11 மணிவரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் திருகுடமுழுக்கு பெருஞ்சாந்தி விழாநடைபெற திருவருள்பாலித்துள்ளதால் அதன்முன்னும் பின்னும் நடைபெறும் அனைத்துக்கிரியைகளிலும் அடியார்கள் கலந்துகொண்டு கணபதிப்பிள்ளையார் திருவருளைப் பெற்றுய்யுமாறு வேண்டுகிறோம்.


இவ்வண்ணம்
ஸ்ரீகணபதிப்பிள்ளையார் ஆலய பரிபாலன சபை இந்துஇளைஞர் மன்றம் ,கிராமமக்கள், கிரான்குளம்.
Published from Blogger Prime Android App