அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தில் எரிந்த வீட்டிலிருந்து 39 வயது குடும்பஸ்தரின் சடலம் மீட்பு !

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோளாவில் 02 பிரதேசத்தில் வீடொன்றின் முன்பகுதி முற்றாக எரிந்த நிலையில் உள்ளிருந்து 39 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேற்படி வீட்டின் பிற்பகுதி கல் வீடாக அமைந்துள்ளதுடன் முன்பகுதியின் கூரை கிடுகினால் வேயப்பட்டிருந்தது. வீட்டின் முன்பகுதியே தீக்கிரையாகியுள்ளதுடன் தீக்கிரையான பகுதியிலேயே சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது.

உயிரிழந்தவர் இரு பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று முன்தினம் இரவு (09) இச்சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என அறியமுடிவதுடன் சம்பவம் நடைபெற்றபோது மனைவி, பிள்ளைகள் அனைவரும் உறவினர் வீட்டில் தங்கி இருந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அக்கரைப்பற்று பொலிசார் விசாரணையை ஆரம்பித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்காக உயர் அதிகாரிகளுக்கும் விசேட தடயவியல் பொலிசாருக்கும் அறிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி பிரேத உடற்கூற்றாய்வு பரிசோதனைகளுக்காக சடலத்தை கொண்டு செல்ல உத்தரவிட்டார்.Published from Blogger Prime Android App