கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் : நிதி இராஜாங்க அமைச்சர் !

நாட்டில் வெளிநாட்டு ஒதுக்கம் அதிகரித்துள்ள நிலையில், இறக்குமதி கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவான்வெல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடங்கங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எதிர்காலத்தில் தேவைகளுக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான அனுமதிகளும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறைக்கு தேவையான 750 வேன்கள் மற்றும் 250 பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கம், நிதியமைச்சு, திரைசேறி என்பன தொடர்ந்தும் ஆராய்ந்து வருகின்றன. அவற்றினால் வழங்கப்படும் அறிக்கைகளின் அடிப்படையில் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன

5 பில்லியன் ரூபா வரை வெளிநாட்டு ஒதுக்கம் அதிகரித்துள்ளதுடன், ரூபாவின் பெறுமதியும் வலுவடைந்து வருகிறது.

எனவே, தேவையான வாகனங்கள் மற்றும் அவற்றின் வகைகள் என்ன என்பது தொடர்பில் தற்போது ஒரு குறிப்பிட்ட குழுவால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Published from Blogger Prime Android App