ஒருகிலோ நெத்தலி 125 ரூபா விலை குறைக்கப்பட்டு 1200 ரூபாவுக்கு விற்கப்படவுள்ளது. பெரிய வெங்கயம் ஒரு கிலோ 55 ரூபா விலை குறைக்கப்பட்டு 320 ரூபாவுக்கும் கோதுமை மா ஒருகிலோ 7 ரூபா குறைக்கப்பட்டு 185 ரூபாவுக்கும் ஒரு கிலோ வெள்ளை அரிசி 4 ரூபா குறைக்கப்பட்டு 185 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.
வாடிக்கையாளர்கள் இன்று (11) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள லங்கா சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக இந்தப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும்