விஜயதாஸ ராஜபக்ஷவை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் கோரிக்கை !

நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜயதாஸவுக்குப் பதிலாக அமைச்சரவைக்குள் தம்மிக்க பெரேராவை உள்வாங்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக தன்னிச்சையான கருத்து பரிமாற்றங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.Published from Blogger Prime Android App