நாடுபூராகவும் பாடசாலையில் இணைக்கப்பட்டு பல வருடங்களாக ஆசிரியர் சேவையில் ஈடுபட்டு வரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவையில் நிரந்தரமாக உள்ளீர்க்கக் கோரி கல்வியமைச்சிற்கு முன்பாக இன்று(22) கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
இன்றைய ஆர்ப்பாட்டத்தில் நாட்டின் பல பாகங்களில் இருந்து பாடசாலைகளில் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டு கல்வி அமைச்சுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டு அதாவது (susil go home ) இன்றைய ஆர்ப்பாட்டம் பல மணி நேரமாக இடம்பெற்றிருந்தது. அதன் பிற்பாடு கல்வி அமைச்சு , மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியவர்களோடு கலந்துரையாடல் இடம்பெற்றது. அக்கலந்துரையாடலில் தாங்கள் முன்வைத்த விடயம் பாடசாலையில் இணைக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பரீட்சை இன்றி உள்வாங்கவேண்டும் . என தமது கோரிக்கையினை முன்வைத்திருந்தனர். அதன்படி இன்றிலிருந்து பத்து நாட்களுக்குள் தம்மை உள்வாங்குவதற்கான விசேட அமைச்சரவை அனுமதியினைப்பெற்று அனைவரையும் உள்வாங்குவதாக கூறியிருந்தார். அதன்பிற்பாடு அவ்வாறு உள்வாங்குவதென்றால் வழக்கு மீளப்பெறப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டது. அதனை அகில இலங்கை பட்டதாரிகள் சங்கத் தலைவர் க.அனிதனிடம் கேட்டனர். அதற்கு தான் கூறிய பதில் வழக்கினை மீளப்பெறுவதென்றால் எமது சட்டத்தரணிகளோடு நீதிபதிகளை சந்தித்து இவர்களை நாங்கள் பாடசாலைக்குள் பரீட்சையின்றி உள்வாங்குகின்றோம். என அவர்களுக்கு மத்தியில் உறுதிப்படுத்தப்படல் வேண்டும் . அவ்வாறு இடம்பெற்றால் மாத்திரமே வழக்கு தொடர்பான அடுத்தகட்ட நகர்வுகளை யோசிப்போம் என கூறியிருந்தார். இன்றைய ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நிறைவுற்றது.