குடும்பத்திற்கு ஒரு பசு வழங்கல் வேலைத்திட்டமானது
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலன சபை ஆலயத்திற்கு நேர்த்தியாக கிடைக்கப்பெறும் பசுக்களை விற்பனை செய்யாமல் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக இப் பணி இடம்பெற்று வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலகங்களுடன் இணைந்து மிகவும் பொருளாதார வசதி குறைந்த குடும்பத்திற்கு ஒரு பசு வழங்கும் வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தி வருகின்றது அதற்கு அமைவாக கட்டம்2 நிகழ்வானது கடந்த 2024.05.12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலில் இறைவன் திருவருளுடன் சிறப்பாக இடம்பெற்றது.
இதன்போது ஆலய வண்ணக்கமார் மற்றும் நிருவாக சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டு வழங்கி வைத்தனர். இரண்டாம் கட்டத்தில் மண்முனை தென்எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இரண்டு பயனாளிகளுக்கு
ஆளுக்கொரு பசு என்ற அடிப்படையில் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் இனிவரும் காலங்களிலும் குறித்த இறை பணி தொடரும் என ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


