வாழைச்சேனையில் ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : ஒருவர் காயம் !

ரயிலுடன் மோதுண்ட நபரொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை (14) இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் வாழைச்சேனை - பொத்தானைக்குச் செல்லும் வழியாக சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரே ரயிலுடன் மோதி படுகாயமடைந்துள்ளார்.

இவ்வாறு விபத்துக்குள்ளான நபர் காவத்தமுனை ஹிஸ்புல்லாஹ் வீதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்த நபர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.Published from Blogger Prime Android App