திருப்பழுகாமம் "விறிலியன்ற்" விளையாட்டுக் கழக விளையாட்டுப் போட்டி




உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு திருப்பழுகாமம்
"விறிலியன்ற்" விளையாட்டுக் கழகம்
நடாத்தும் மாபெரும் கலாசார விளையாட்டு போட்டி இடம்பெற்றது.
திருப்பழுகாமம் "விறிலியன்ற்"விளையாட்டுக் கழகத்தின் தலைவர் வேல்மாறன் தலைமையில் நேற்று(26-05-2024) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30மணிக்கு
பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன்,
போரதீவுப்பற்று பிரதேசசபை செயலாளர் சி.பகீரதன்

விசேட அதிதிகளாக
வைத்தியர்.புண்ணியமூர்த்தி சோதிராஜ் திருப்பழுகாமம்,மேலதிக மாவட்டப் பதிவாளர்.
அ.பேரின்பநாயகம், திருப்பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலய அதிபர் வே.யோகேஸ்வரன்


சிறப்பு அதிதிகளாக
இலங்கை வங்கி,மக்கள் வங்கி மற்றும்
தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர்கள் கலந்துகொண்டனர்



அதனைத்தொடர்ந்து
கொடியேந்தல் வைபவம்
ஒலிப்பிக் தீபம் ஏந்தல்
மங்கல விளக்கேந்தல்
இடம்பெற்றன.

திருப்பழுகாமம் விறிலியன்ற் விளையாட்டுக்கழகத்தின் தொழிலாளர் தின கலாசார விளையாட்டுக்கள் ஒன்றன் பின் ஒன்றாக இடம் பெற்றனர்.

அதனைத்தொடர்ந்து
அதிதிகள் பொன்னாடை போற்றி கௌரவித்தல் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை க.பொ.த(சா.த) பரீட்சைகளில் அதியுயர் சித்தி பெந்றோர் மற்றும் க.பொ.த (உ.த) பரீட்சைகளில் சித்தி பெற்று பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கல்விக் கல்லூரிகளுக்கு தெரிவான திருப்பழுகாமத்து மாணவர்களை கௌரவித்தல் நிகழ்வுகள் இடம் பெற்றன.

வெற்றி பெற்ற வீரர் வீராங்கனை களுக்கான பரீசில்கள் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிகழ்வில் உடற்கல்வி ஆசிரியர்கள், இளைஞர்கழக உத்தியோகஸ்தர், விளையாட்டு நடுவர்கள், கிராமஉத்தியோகஸ்தர்கள் விளையாட்டுகழக உறுபினர்கள் சிறுவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.