(நிரேந்திரன்) கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சின்னக்கதிர்காமம் என்றழைக்கப்படும் மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய கொடியேற்றமானது இன்று(30) போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் ஆலய வண்ணக்கர் பொ.செல்வக்குமார் முன்னிலையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் அதிகளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.தொடர்ந்து 20 நாட்கள் திருவிழாக்கள் இடம்பெறுவதுடன் 21ம் நாளான எதிர்வரும் 19.08.2024 அன்று தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவுபெறும்.





