காந்திபுரம் கலைமகள் வித்தியாலயத்திற்கு போட்டோபிரதி இயந்திரம் வழங்கிவைப்பு!



பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட மட்/பட்/காந்திபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களது நிதியொதுக்கிட்டின் கீழ் பாடசாலைக்கான போட்டோப்பிரதி இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு இன்று(05) பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் சா.சத்தியசீலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராக இரா.சாணக்கியன், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் மு.மதிமேனன் வலயக்கல்வி அலுவலக கல்வி மேம்பாட்டு உத்தியோகத்தர் சோ.பத்மராஜா,ஆசிரியர்கள்,கிராமமுன்னேற்றச்சங்கத்தினர்,பெற்றோர்கள் மற்றும் பழைய மணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.