அகமதாபாத் நகரில் நடந்த விமான விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 290 ஐ கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் எயார் இந்தியா விமான நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானதில் பிஜே மருத்துவக் கல்லூரியின் விடுதியிலிருந்த 20 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குஜராத் - அகமதாபாத் இல் இடம்பெற்ற விமான விபத்தில் 12 வயதிற்கு உட்பட்ட 14 குழந்தைகள் விமானத்தில் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த விபத்தில் 133 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி செய்தி வெளியிட்டுள்ளன.
குஜராத் - அகமதாபாத் இல் இடம்பெற்ற விமான விபத்து தொடர்பில் தற்பொது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில், 3.19 மணிக்கு ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், விமானத்தில் பயணித்த பயணிகள் தொடர்பில் தகவல் வெயியிடப்பட்டுள்ளது.
அதன்படி போயிங் 787-8 விமானத்தில் 242 பயணிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்றது.
இவர்களில் 169 பேர் இந்தியர்கள், எனவும் 53 பேர் பிரித்தானிய நாட்டவர்கள்எனவும் 1 கனடா நாட்டவர் மற்றும் 7 பேர் போர்த்துகேய நாட்டவர்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.17 மதியளவில் லண்டன் புறப்பட்ட ஏயார் விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அந்த விமானத்தில் சுமார் 240க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதுவரை 110 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
குறித்த விமானத்தில் முன்னாள் குஜராத் முதலமைச்சர் பயணித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது
இந்தியாவின் (India) - குஜராத் (Gujarat) மாநிலம் அகமதாபாத்தில் விமான நிலையம் அருகே விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.