வீதியில் ஏற்பட்ட கோர விபத்து.. பலி எண்ணிக்கை 15ஆக உயர்வு

எல்ல - வெல்லவாய வீதியின் 24ஆவது மைல்கல்லுக்கு அருகில் ஏற்பட்ட வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது.
https://drive.google.com/uc?export=view&id=1fkKb3Fk_o79N3h_laQ1kO_XatE4ZJLGJhttps://drive.google.com/uc?export=view&id=1Yl-MA7ZktajNg_0jh-tjS9Cdz89JVxje
இறந்தவர்களில் 9 பெண்கள் மற்றும் 6 ஆண்கள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சம்பவத்தில் ஐந்து குழந்தைகள் உட்பட பதினொரு ஆண்கள் மற்றும் ஏழு பெண்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

எல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

எல்ல-வெல்லவாய வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை, போதிய வெளிச்சம் இன்மையால் மீட்பு பணிகள் தாமதமடைந்ததாகவும் வீதியில் வாகன நெரிசல்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது. 

இந்நிலையில், பொது மக்களை வேடிக்கை பார்க்க வர வேண்டாம் எனவும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்