செம்மணி பேரவலம்! 240 மனித என்புக்கூடுகள் மீட்பு

https://drive.google.com/uc?export=view&id=1kiPCDhrQPxVrLRsbS9udxfZeoJD7e2Uvமனித பேரவலத்தின் அடையாளமான யாழ்ப்பாணம் - செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 5 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் அகழ்வுப்பணிகள் 44ஆவது நாளாக இன்று முன்னெடுக்கப்பட்ட போதே குறித்த என்புக்கூடுகள் வெளிப்பட்டன.

இதனடிப்படையில் இதுவரை 240 மனித என்புக்கூடுகள் வெளிப்பட்டுள்ளன.

மேலும், கட்டம் கட்டமாக இதுவரையில் 53 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 11 என்புக்கூட்டு தொகுதியுடன் இதுவரையில் 235 என்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நேற்றைய தினம் அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித என்புக்கூட்டு தொகுதிகள் இன்றைய தினம் சுத்தம் செய்யப்பட்டன.

இதன்போது, கால் மடித்து அடக்கம் செய்யப்பட்ட நிலையில் என்புக்கூட்டுத்தொகுதி ஒன்று வெளிப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த என்புக்கூட்டு தொகுதி சைவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்தார்.

https://drive.google.com/uc?export=view&id=10ecGqi6m04a8LUBTYltQxxfk7U90m3LCஅத்தோடு, இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகளுக்காக நீதிமன்றம் அனுமதித்த 45 நாட்கள் நாளைய தினத்துடன் நிறைவடையவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது