தேசிய அளவில் முதன்முறையாக, கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிசேரியன் மூலம்
31 வயது இலங்கைத் தாய் ஒருவர் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார் தெரிவிக்கப்படுகிறது - மூன்று ஆண் குழந்தைகள் மற்றும் மூன்று பெண் குழந்தைகள்.
பேராசிரியர் டிரான் டயஸின்
பராமரிப்பில், அதிகாலை 12:16
முதல் 12:18 வரை இரண்டு
நிமிடங்களுக்குள் குழந்தைகள் பிரசவிக்கப்பட்டன. தாய் மற்றும்
பிறந்த ஆறு குழந்தைகளும் நல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.