மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் ஆயுதம் மற்றும் தங்கத்தை தேடி அகழ்வு பணி

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை தேடி மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள புளியடிமடு காயங்குடா பகுதியில் தனியார் காணி பகுதியில் நீதிமன்ற உத்தரவு பெற்று அகழ்வு பணியை விசேட அதிரடிப்படையினர் இன்று திங்கட்கிழமை (29) முன்னெடுத்துள்ளனர்.

கல்லடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் கந்த குட்டி ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான காணி பகுதியில் கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் முகாம் இருந்துள்ளது.

அந்த காலப்பகுதியில் நிலத்தில் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை புதைத்து மறைத்து வைத்துள்ளதை அகழ்ந்து எடுப்பதற்காக விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற உத்தரவு பெற்று மண் அகழ்வும் இயந்திரமான (பக்கோ இயந்திரம்) மூலம் அகழும் நடவடிக்கையை இன்று முன்னெடுத்தனர்.