ஓட்டமாவடி பிரதான வீதி மீன் சந்தைப் பகுதியில் விபத்து..!

சற்றுமுன்னர் ஓட்டமாவடி பிரதான வீதி மீன் சந்தைப் பகுதியில் ஆட்டோ ஒன்றும் சிறிய கூலர் (பட்டா) வண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளானவர்கள் சிறு காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.